மேலும்

நாள்: 14th September 2019

கோத்தாவின் பரப்புரைக்கு நிதியை கொட்டும் சீனா? – தெரியாது என்கிறார் பேச்சாளர்

வரும் அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளுக்கு சீனா பெருமளவில் நிதியை செலவிட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கும் கூட்டம் – கூட்டமைப்புக்கும் அழைப்பு?

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தீர்மானிக்க நாளை நடைபெறவுள்ள கூட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிப்பதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி முடிந்தது

இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் விசாகப்பட்டினத்தில் நடந்து வந்த SLINEX 2019 கூட்டுப் பயிற்சி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

ஒரே மேடையில் அதிபர் வேட்பாளர்கள் – கேள்விகளுக்கு பதிலளிக்க ஏற்பாடு

வரும் அதிபர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அனைவரையும், ஒரே மேடையில் கொண்டு வந்து, பொதுமக்களை கேள்விகளுக்கு பதிலளிக்கச் செய்யும் நிகழ்வு ஒன்று ஒழுங்கு செய்யப்படவுள்ளது.

‘யாழ்ப்பாண விமான நிலையம்’ – பலாலிக்கு பெயர் மாற்றம்

விரைவில் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள பலாலி விமான நிலையத்துக்கு யாழ்ப்பாண விமான நிலையம் என்று பெயரிடப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐதேக அதிபர் வேட்பாளர் – நாளை முடிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக, நாளை முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது ஐதேக

சிறிலங்கா ரூபவாஹினி் கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

பொருத்தமான வேட்பாளரை தெரிவு செய்ய நால்வர் குழு

அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொருத்தமான வேட்பாளர் யார்,  கட்சியின் வெற்றியை உறுதிப்படுத்தக் கூடியவர் யார் என்ற சமூக ஆய்வுகள் மற்றும் கருத்துக்கணிப்புகளை ஆய்வு செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நால்வர் குழுவை அமைத்துள்ளது.

ஒக்ரோபர் 15இற்கு முன் தேர்தலுக்கான அறிவிப்பு

அதிபர் தேர்தலுக்கான அழைப்பை விடுப்பது குறித்து அரசியல் கட்சிகளால் தீர்மானிக்க முடியாது என்றும் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவு செய்யும் என்றும்,  ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பிரதமருடன் கனிமொழி சந்திப்பு

கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார்.