மேலும்

நாள்: 21st September 2019

கோத்தா உள்ளிட்ட 6 வேட்பாளர்களுக்கு கட்டுப்பணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, இதுவரையில் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 6 வேட்பாளர்கள் சார்பாக, தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய கூட்டத்திலும் இணக்கப்பாடு இல்லை

அதிபர் வேட்பாளர் தொடர்பாக நேற்றுமாலை ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களின் முக்கியமான கூட்டம் இடம்பெற்றது. எனினும் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெரிவுக்குழுவிடம் இரண்டரை மணி நேரம் சிறிலங்கா அதிபர் சாட்சியம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார்.

அவசர அமைச்சரவையைக் கூட்டியது அதிபர் சிறிசேன தான் – ரணில்

நிறைவேற்று அதிகார அதிபர் பதவியை ஒழிப்பது தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவே ஏற்பாடு செய்திருந்தார் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு வாய்ப்பளிக்காவிடின் அரசியலுக்கு முழுக்கு – நளின் பண்டார

அதிபர் தேர்தலில் போட்டியிட சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால், அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஆசிரியத் தொழிலில் ஈடுபடப் போவதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.