மேலும்

நாள்: 25th September 2019

யோஷித ராஜபக்ச மீண்டும் சிறிலங்கா கடற்படையில்

சிறிலங்கா கடற்படையில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த லெப். யோஷித ராஜபக்ச, மீண்டும் கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என, கடற்படைப் பேச்சாளர்  லெப்.கொமாண்டர் சமந்த சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது – ஞானசார தேரர்

உயிரிழந்த பிக்குவின் உடலை அடக்கம் செய்யாமல், நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது என்றும், விகாரைக்கு சொந்தமான நிலத்திலேயே பிக்குவின் உடலை எரிந்ததாகவும், பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நிபந்தனையுடன் சஜித்தை வேட்பாளராக நிறுத்த ரணில் இணக்கம்

ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை, கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை உருவாக்க தெரிவுக்குழு பரிந்துரை

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு, தமது விசாரணை அறிக்கையை இறுதி செய்வதற்கான கூட்டத்தை நேற்று நடத்தியது. இதில் ஐந்து பிரதான விடயங்கள் குறித்து பரிந்துரைகளை முன்வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோத்தாவின் சுய வரலாற்று நூல் வெளியீடு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்சவின் சுயவரலாற்று நூலான, ‘கோத்தாபய’ கொழும்பில் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் இந்த நிகழ்வு நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.

குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தமாட்டோம் –  தயாசிறி

அதிபர் தேர்தலில் குமார வெல்கமவை வேட்பாளராக நிறுத்தும் எண்ணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சி வேட்பாளராக போட்டியிடத் தயார் – குமார வெல்கம

சிறிலங்கா சுதந்திரக் கட்சி தனது பெயரைப் பரிந்துரைத்தால், வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.