மேலும்

நாள்: 9th September 2019

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பம் – சிறிலங்கா குறித்து மனித உரிமை ஆணையாளர் மௌனம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்கா நிலைமைகள் குறித்து கரிசனை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நொவம்பர் 16 அல்லது 23இல் அதிபர் தேர்தல் – பீரிஸ் ஆரூடம்

சிறிலங்கா அதிபர் தேர்தல் வரும் நொவம்பர் 16 ஆம் நாள் அல்லது 23ஆம் நாள் நடக்கும் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக, அந்தக் கட்சியின் தவிசாளரான பேராசிரியர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நான்காவது அதிபர் வேட்பாளர் அறிவிப்பு

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில்  தமது கட்சிின் வேட்பாளராக துமிந்த நாகமுவ போட்டியிடுவார் என, முன்னிலை சோசலிசக் கட்சி அறிவித்துள்ளது.

கோத்தாவின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிக் கொட்டிய முரளிதரன்

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்பட்ட மாநாட்டில், சிறிலங்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள கருத்து, கோத்தா தரப்புக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

நாளை நடக்குமா ரணில்- சஜித் சந்திப்பு?

ஐதேகவின் அதிபர் வேட்பாளர் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று நடைபெறவிருந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

இந்திய- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

இந்திய- சிறிலங்கா கடற்படையினருக்கு இடையிலான, SLINEX 2019 கூட்டு கடற் போர்ப் பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் ஆரம்பமாகியுள்ளது.