மேலும்

மாதம்: February 2019

டுபாயில் மாகந்துர மதுசுடன் இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளவரும் சிக்கினார்

டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஸ் என்ற பாதாள உலக கும்பலின் முக்கிய தலைவருடன் கைது செய்யப்பட்டவர்களில், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

அதிபர் வேட்பாளரை இன்னும் முடிவு செய்யவில்லை – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று இதுவரை தாம் முடிவு எதையும் எடுக்கவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறலில் ஈடுபாடு இல்லை – சிறிலங்கா மீது ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அதிருப்தி

பொறுப்புக்கூறல் செயல்முறையில் சிறிலங்கா வேகமான முன்னேற்றங்களை காண்பிக்கவில்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையார் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மாலியில் இருந்து சிறிலங்கா படையினரின் சடலங்கள் கொண்டு வரப்பட்டன

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் கண்ணிவெடித் தாக்குதலில் உயிரிழந்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளினதும், சடலங்கள் நேற்று பிற்பகல் சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டன.

சுதந்திர சதுக்கத்திலும் அமைதிவழி எதிர்ப்புப் போராட்டம்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் நேற்றுக்காலை காலி முகத்திடலில் நடந்து கொண்டிருந்த போது, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில், அமைதி வழி எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கட்டாருக்கான சிறிலங்கா தூதுவர் பதவி விலகல்

கட்டார் நாட்டுக்கான சிறிலங்காவின் தூதுவர் ஏ.எஸ்.பி.லியனகே பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக அவரை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்புமாறு உத்தரவிட்டார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

நாடாளுமன்றத்தில் இன்று நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் – பாதுகாப்புக்கு அதிக ஒதுக்கீடு

2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் ஐதேகவின் கனவுக்கு ஆப்பு வைத்தார் சிறிசேன

ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ள மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் கரிநாளாக கடைப்பிடிக்கப்பட்ட சிறிலங்காவின் சுதந்திர நாள்

சிறிலங்காவின் 71 ஆவது சுதந்திர நாளான இன்று, காலி முகத்திடலில் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புடன் கொண்டாட்டங்கள் இடம்பெற்ற அதேவேளை, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்கள் கரிநாளாக, துக்கநாளாக கடைப்பிடித்ததுடன், எதிர்ப்புப் போராட்டங்களையும் நடத்தினர்.

சுங்கப் பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக சட்டநடவடிக்கை – பி.எம்.எஸ்.சார்ள்ஸ்

சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக, சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், தெரிவித்துள்ளார்.