மேலும்

மாதம்: December 2018

அமெரிக்க கடற்படைக் கப்பலும் கொழும்பு வந்தது

ரஷ்ய கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் நிலையில், அமெரிக்காவின் தரையிறக்கக் கப்பல் ஒன்று நேற்று கொழும்பு வந்து சேர்ந்துள்ளது.

3 அமைச்சர்கள், 18 இராஜாங்க அமைச்சர்கள், 7 பிரதி அமைச்சர்கள் நியமனம்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தில், அமைச்சரவையில், இடம்பெறாத 3 அமைச்சர்கள், 18 இராஜாங்க அமைச்சர்கள்,  7 பிரதி அமைச்சர்கள் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் நாசகாரிகளுடன் 1000 ரஷ்ய கடற்படையினர்

சுமார் ஆயிரம் ரஷ்ய கடற்படையினருடன், ரஷ்ய கடற்படையின் அதிநவீன போர்க்கப்பல்களைக் கொண்ட அணியொன்று நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர்: சபாநாயகரின் முடிவு இன்று

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பான சர்ச்சை குறித்து சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது முடிவை இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

தேசிய அரசாங்கமா? – அடுத்த வாரம் முடிவு

தேசிய அரசாங்கத்தை அமைப்பதா அல்லது ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தையே முன்னெடுடுத்துச் செல்வதா என்று அடுத்தவாரம் தீர்மானிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

விரைவில் ஐதேக வசமாகும் சட்டம், ஒழுங்கு அமைச்சு?

தன்னைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித் திட்டம் தொடர்பாக நடக்கும் விசாரணை முடியும் வரை, சட்டம், ஒழுங்கு அமைச்சை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் வழங்கப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார்.

வரவேற்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் வரவேற்றுள்ளார்.

கொழும்பு துறைமுத்தில் இந்தியக் கடற்படையின் ஆய்வுக் கப்பல்

சிறிலங்கா கடற்பரப்பில் சமுத்திரவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இந்திய கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பலான ஜமுனா, நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சிறிலங்கா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 29 புதிய அமைச்சர்கள்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் 29 அமைச்சர்கள் இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவை பதவியேற்பு ஆரம்பம் – ஊடகங்களுக்கு இருட்டடிப்பு

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு தற்போது, மூடப்பட்ட அறைக்குள் இடம்பெற்று வருகிறது.