மேலும்

மாதம்: November 2018

ஐ.நா பொதுச் செயலர் விரைவில் சிறிலங்காவுக்குப் பயணம்

ஐ.நா பொதுச் செயலர்  அன்ரனியோ குரெரெஸ், விரைவில் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குடாநாட்டில் மீண்டும் வீதிகளில் களமிறக்கப்பட்ட சிறிலங்கா இராணுவம்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் ரோந்துப் பணிகளில் இறக்கி விடப்பட்டுள்ளனர். நேற்று யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர், கால்நடையாகலும், மிதிவண்டிகளிலும், ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் நாளை தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்க ஏற்பாடு

தமிழீழ மாவீரர் நாள் இன்று தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக கடைபிடிக்கப்படுகிறது.  இதனை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.

தாயகக் கனவினை தோளினில் சுமந்தோரை நினைவினில் நிறுத்தும் நாள்

தாயகக் கனவினைத் தோளினில் சுமந்து, சுதந்திரக் காற்றின் சுவாசத்துக்காய் தம் இன்னுயிர்களை ஈந்த மாவீரர்களை நினைவு கொள்ளும் நாள் இன்று.

மீண்டும் அலரி மாளிகையில் வசந்த சேனநாயக்க

சுற்றுலா மற்றும் வன உயிரினங்கள் அமைச்சர் வசந்த சேனநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் சாய்ந்துள்ளார். அலரி மாளிகையில் இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் வசந்த சேனநாயக்க பங்கேற்றுள்ளார்.  

யாழ். பல்கலை.யில் பிரபாகரன் பிறந்தநாள் – வல்வையில் காவல்துறை கெடுபிடி

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றுஉலகின் பல்வேறு நாடுகளிலும், தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழர் தாயகப் பிரதேசங்களிலும் பல்வேறு இடங்களிலும், கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

சிறிலங்காவின் அரசியலைக் குழப்பிய தொலைபேசி அழைப்பு

ஒக்ரோபர் 26 காலை 10 மணியளவில், சிறிலங்காவின் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்தது. தொலைபேசியில் மகிந்த ராஜபக்சவின் அரசியல் எதிரியான சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தொடர்பு கொண்டிருந்தார்.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம்

நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிப்பதற்கு, தமது தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட குழாமை சிறிலங்காவின் தலைமை நீதியரசர், நளின் பெரேரா நியமித்துள்ளார்.

மௌனத்தை உடைத்தார் துமிந்த திசநாயக்க – மைத்திரிக்கு எதிராக புதிய அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திசநாயக்க உள்ளிட்டவர்கள், தனி அணியாகச் செயற்படத் திட்டமிட்டுள்ள நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

குற்றச்சாட்டு தொடர்ந்தால் நானும் அம்பலப்படுத்துவேன் – மைத்திரிக்கு சாகல எச்சரிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தினால், தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நிலை வரும் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சரும் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகல ரத்நாயக்க.