மேலும்

விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா

2015 ஜனவரி 8 இல் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் அபிலாசைகளுக்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிலர், துரோகம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, விசுவாசமானவர்களுடன் இணைந்து கட்சியை மீளக்கட்டியெழுப்பப் போவதாக தெரிவித்துள்ளார்.

“ஏனைய பல கட்சிகள் குழுக்களுடன் இணைந்து நல்லாட்சியை கொண்டு வருவதற்கான  யுத்தத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றது.

சிறிலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்து கொள்வதன் மூலம் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க முனைகின்றனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து யார் விலகினாலும் நான் விலகமாட்டேன்.

கட்சிக்கு விசுவாசமானவர்களுடன்   இணைந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மீள கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.” என்று அவர்  தெரிவித்துள்ளார்.

ஒரு கருத்து “விசுவாசமானவர்களுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்புவேன் – சந்திரிகா”

  1. karunakaran says:

    Srilanka started towards ending… of its black history, hand over the srilanka to the hands of Tamiians…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *