மேலும்

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக மனுக்கள் – விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தைக் கலைக்கும், சிறிலங்கா அதிபரின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 17 மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம், நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் சார்பில் 17 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று முற்பகல் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து, மனுதாரர்கள் தமது சமர்ப்பணங்களை செய்வதற்காக பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 2 மணிக்கு, விசாரணை ஆரம்பித்தது. மனுதாரர்கள் தமது சமர்ப்பணங்களை செய்தனர்.

பிற்பகல், 4 மணியளவில் மீண்டும் 15 நிமிடங்கள் விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

அதன் பின்னர் மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட்ட போது, சட்டமா அதிபர் மேலதிக காலஅவகாசத்தைக் கோரினார். இதனால் சற்று முன்னர், விசாரணைகளை நாளை காலை வரை நீதியரசர்கள் ஒத்திவைத்துள்ளனர்.

சிறிலங்கா வரலாற்றிலேயே மிக முக்கியமான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றதால், உச்சநீதிமன்றத்தில் பெருமளவான அரசியல்வாதிகள், சட்டவாளர்கள், ஊடகவியலாளர்கள் குவிந்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *