மேலும்

நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ஐதேக, கூட்டமைப்பு, ஜேவிபி உச்சநீதிமன்றம் செல்கின்றன

அரசியலமைப்பை மீறி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

சிறிலங்கா அதிபர் முன்கூட்டியே நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளதற்கு எதிராக அடுத்தவார தொடக்கத்தில் தாம் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக, நாளை மறுநாள் திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில், மனுத்தாக்கல் செய்யப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இன்று கூறினார்.

ஜேவிபியின் சார்பிலும், நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படும் என்று அந்தக் கட்சியின் தமலைவர் அனுரகுமார திசநாயக்க இன்று கொழும்பில் அறிவித்தார்.

இவர்கள் தவிர, சட்டவாளர் அமைப்புகளும், பல்வேறு சிவில் அமைப்புகளும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *