மேலும்

மாதம்: January 2018

ஐதேக பிரதி அமைச்சர் மீதும் ஆணைக்குழு குற்றச்சாட்டு

ஐதேகவைச் சேர்ந்த பிரதி அமைச்சர் ஒருவருக்கு எதிராகவும், விசாரணைகளை நடத்த சிறிலங்கா அதிபர் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

இந்தியர்களின் இதயத்தில் சிறிலங்காவுக்கு சிறப்பான இடம் – இந்தியத் தூதுவர்

இந்தியர்களின் இதயத்தில் சிறிலங்காவுக்கு சிறப்பான இடம் ஒன்று இருப்பதாக சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

சடலங்களை கடலில் அழிக்க பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படைப் படகின் கட்டளை அதிகாரி கைது

கொழும்பு நகரப் பகுதியில் 2008ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் கடற்படை புலனாய்வு அதிகாரி ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் அவசர கூட்டத்தை மகிந்த அணி புறக்கணிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று கூட்டவுள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கான அவசர கூட்டத்தைப் புறக்கணிக்க, மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

கட்சிகளின் தலைவர்களுக்கு சிறிலங்கா அதிபர் அவசர அழைப்பு

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் வானில் நிகழவுள்ள மூன்று அரிய நிகழ்வுகள்

மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது கூட்டமைப்பு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நேற்று வவுனியாவில் வெளியிடப்பட்டது.

தேயிலை, மிளகு மீள் ஏற்றுமதிக்குத் தடை

சிறிலங்காவில் இருந்து தேயிலை மற்றும் மிளகு ஆகியனவற்றை மீள் ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள் ஐ.நா அதிகாரி

25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

பெப்ரவரி 8ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் தேர்தல் பிற்போடப்படும் – ஆணைக்குழு எச்சரிக்கை

எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் நாள் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் எச்சரித்துள்ளார்.