மேலும்

மாதம்: December 2017

கேப்பாப்புலவில் 133.34 ஏக்கர் காணிகளை விடுவித்தது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழ் அரசுக் கட்சி பதிலடி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

தேயிலை தடைக்கும், அஸ்பெஸ்டஸ் தடைக்கும் தொடர்பில்லை – என்கிறது ரஷ்யா

சிறிலங்கா தேயிலை இறக்குமதிக்கு ரஷ்யா விதித்த தடைக்கும், அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளுக்கு சிறிலங்கா விதித்த தடைக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவுக்கான ரஷ்ய தூதுவர் யூரி பி மரேரி தெரிவித்துள்ளார்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? – மறுக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அடுத்த மாகாணசபைத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்?

நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதென்பது  சாத்தியமற்றது.

அரசியலமைப்பு சபையில் இருந்து விலகினார் விஜேதாச ராஜபக்ச

அரசியலமைப்பு சபையில் இருந்து விலகிக் கொள்வதாக, சிறிலங்காவின் முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சரானார் கமகே – மகிந்த அணிக்குத் தாவினார் லான்சா

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே, இன்று காலை இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 66 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது சிறிலங்கா

உலகளவிலான உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 113 நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 66 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

15 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ராரோ கோனோ எதிர்வரும் ஜனவரி 4ஆம் நாள் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கபொத உயர்தரத் தேர்வு – ஹாட்லி மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த கபொத உயர்தரத் தேர்வு முடிவுகள் இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள நிலையில், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் பௌதிக விஞ்ஞான பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.