மேலும்

இராஜாங்க அமைச்சரானார் கமகே – மகிந்த அணிக்குத் தாவினார் லான்சா

piyasena gamage-sworn state ministerஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே, இன்று காலை இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

அதிபர் செயலகத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக பியசென கமகே, தென்மாகான அபிவிருத்தி, சட்டம் ஒழுங்கு இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றார்.

அண்மையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதியிழப்புச் செய்யப்பட்ட கீதா குமாரசிங்கவின் இடத்துக்கு, பியசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றிருந்தார்.

piyasena gamage-sworn state minister

மகிந்த அணிக்கு தாவினார் நிமல் லான்சா

அதேவேளை, அண்மையில் பிரதி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  நிமல் லான்சா மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணிக்கு ஆதரவு அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *