மேலும்

சிறிலங்கா வருகிறார் அவுஸ்ரேலிய பிரதமர்

maithripala- Malcolm Turnbull (1)அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், சிறிலங்காவுக்கான  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இஸ்ரேலுக்கான இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இன்று ரெல் அவிவ் செல்லவுள்ளார்.

இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில், அவுஸ்ரேலியப் பிரதமர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை, அவுஸ்ரேலியப் பிரதமர் ரேன்புல் சந்தித்துப் பேசவுள்ளார்.

பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல், பாதுகாப்பு ஈடுபாடுகள், நாடுகடந்த குற்றங்கள்- குறிப்பாக ஆட்களைக் கடத்துதலுக்கு எதிராக இணைந்து செயற்படுதல் தொடர்பாக கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவுஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *