மேலும்

மாதம்: September 2017

லலித் வீரதுங்க, அனுஷ பல்பிட்ட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று புதுடெல்லி செல்கிறார் மாரப்பன – நாளை மோடி , சுஸ்மாவுடன் சந்திப்பு

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன மூன்று நாட்கள் பயணமாக இன்று இந்தியா செல்கிறார்.  சிறிலங்கா வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் திலக் மாரப்பன மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

அபராதம், இழப்பீடு செலுத்தாவிடின் லலித் வீரதுங்க மேலும் 3 ஆண்டுகள் கம்பி எண்ண நேரிடும்

லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனைக்கு எதிராக மேல் முறையீடு செய்யவுள்ளதாக இவர்களின் சார்பில் வாதிட்ட சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் தொடங்கியது இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையிலான 5ஆவது கூட்டுப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள்: சிறிலங்கா பதிலளித்தேயாக வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளித்தே ஆக வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக சானி அபேசேகர

சிறிலங்கா காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளராக, சானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தலைவர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நிறைவேறியது – இறுதி வாக்கெடுப்பில் நழுவியது கூட்டமைப்பு

100இற்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் உள்நாட்டு வருமான வரிச் சட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில், பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிபர் ஆணைக்குழுவுக்கு முடிவு கட்டுகிறார் மைத்திரி

ஊழல்கள், மோசடிகள், மற்றும் அதிகாரம், அரசாங்க வளங்கள் முன்னுரிமைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட மோசமான செயற்பாடுகள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படாததால் அதன் செயற்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளன.

20 ஆவது திருத்தச் சட்டவரைவை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை வடக்கு மாகாணசபை இன்று நிராகரித்துள்ளது. இன்று நடந்த வடக்கு மாகாணசபையின் அமர்வில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது.

மகிந்தவின் ‘மூவரணி’யில் ஒருவரான லலித் வீரதுங்கவுக்கு 3 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் அதிபரின் செயலர் லலித் வீரதுங்க மற்றும்  தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.