மேலும்

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

Special Rapporteur Pablo de Greiffஉண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர், பப்லோ டி கிரெய்ப் அடுத்தமாதம் சிறிலங்காவுக்கு மீண்டும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 36 ஆவது கூட்டத்தொடரிலேயே அவர் இதனை அறிவித்தார்.

தமக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்திருப்பதாகவும், வரும் ஒக்ரோபர் 10ஆம் நாள் தொடக்கம், 23ஆம் நாள் வரை அங்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொழில்நுட்ப உதவிகள், ஆலோசனைச் சேவைகளை வழங்குவது இவரது கடப்பாடாகும்.

இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *