மேலும்

மாதம்: August 2017

அரை நூற்றாண்டுக்குப் பின் சிறிலங்கா கடற்படைத் தளபதியாக தமிழருக்கு வாய்ப்பு

சிறிலங்காவில் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னர் தமிழர் ஒருவரை படைத்தளபதிகளில் ஒருவராக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்திருப்பதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது – திலக் மாரப்பன

போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ரவீந்திர விஜேகுணரத்ன நியமனம்

சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் முதல் கட்டளை அதிகாரி மாடிப்படியில் தவறி வீழ்ந்து மரணம்

சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான சிறப்பு அதிரடிப்படையின் முதலாவது கட்டளை அதிகாரியாக இருந்த போதி லியனகே மாடிப்படியில் இருந்து தவறி வீழ்ந்து மரணமானார்.

புலித்தேவனின் கடைசி தொலைபேசி அழைப்பு – பேசாமல் தட்டிக் கழித்தார் எரிக் சொல்ஹெய்ம்?

போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவனிடம் இருந்து, தமக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், ஆனால் தாம் அவருடன் நேரடியாகப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம்.

பாலச்சந்திரன் சிறிலங்கா படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார் – எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டார் என்று தாம் வலுவாக சந்தேகிப்பதாகவும், இது ஒரு மோசமான தீய செயல் என்றும் தெரிவித்துள்ளார் எரிக் சொல்ஹெய்ம்.

பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியவில்லை – வருந்துகிறார் எரிக் சொல்ஹெய்ம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் அதிக நேரத்தைச் செலவிட முடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என்று, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமனம்

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில், நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து,  றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு வரும் 28ஆம் நாள் ஆரம்பம்

சிறிலங்கா இராணுவம் நடத்தும் அனைத்துலகப் பாதுகாப்புக் கருததரங்கான,  7 ஆவது கொழும்பு  பாதுகாப்பு கருத்தரங்கு-2017  வரும், 28ஆம், 29ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.

சிறிலங்கா கடற்படைத் தளபதியாக றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்படவுள்ளார்

கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா சிறிலங்கா கடற்படையின் புதிய தளபதியாக, அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார்.