மேலும்

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ரவீந்திர விஜேகுணரத்ன நியமனம்

Vice Admiral Ravindra Wijegunaratneசிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் சேவை நீடிப்பு, வரும் 22ஆம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில், சிறிலங்கா கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

அன்றைய நாள் அவர், அட்மிரலாக தரமுயர்த்தப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக பொறுப்பேற்பார்.

அதேவேளை, வரும் 22ஆம் நாள், சிறிலங்கா கடற்படைத் தளபதியாக, றியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவும் பதவியைப் பொறுப்பேற்பார்.

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்னர், ட்ராவிஸ் சின்னையா, வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்படுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *