மேலும்

சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்புக் கருத்தரங்கு வரும் 28ஆம் நாள் ஆரம்பம்

defence seminar-2017சிறிலங்கா இராணுவம் நடத்தும் அனைத்துலகப் பாதுகாப்புக் கருததரங்கான,  7 ஆவது கொழும்பு  பாதுகாப்பு கருத்தரங்கு-2017  வரும், 28ஆம், 29ஆம் நாள்களில் நடைபெறவுள்ளது.

‘வன்முறை தீவிரவாதத்தை எதிர்கொள்ளல்- உலகளாவிய போக்குகள்’ என்ற தொனிப் பொருளில் இந்த ஆண்டுக்கான கருத்தரங்கு, கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இம்முறை மாநாட்டில், 200 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக சிறிலங்கா இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில், சம்பியா நாட்டின் இராணுவத் தளபதி பங்கேற்கவுள்ளார். சார்க் நாடுகளின் இராணுவத் தளபதிகள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

defence seminar-2017

இம்முறை, 15 வெளிநாட்டு, 12 உள்நாட்டு நிபுணர்கள் இந்தக் கருத்தரங்கில் உரையாற்றவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *