மேலும்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் சம்பந்தன் நீண்ட பேச்சு

Ravi-sampanthan1தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நேற்று இந்தச் சந்திப்பு சுமார் 1 மணித்தியாலம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், பல்வேறு முக்கிய விவகாரங்கள் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு நடத்தியதாக தெரிவித்தார்.

Ravi-sampanthan

நல்லாட்சியை வலுப்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்துக்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடன் பரிமாறிக் கொண்டதாகவும், இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில், இரா.சம்பந்தனுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *