மேலும்

மாதம்: March 2017

சிறிலங்காவின் பாதுகாப்புச் சவால்கள் குறித்து அமெரிக்க இராணுவ அதிகாரிகளுக்கு விளக்கம்

அமெரிக்க இராணுவத்தின் பசுபிக் கட்டளைப் பீடத்தின் இளம் அதிகாரிகள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் இன்று 10 நாள் கூட்டுப் பயிற்சியை ஆரம்பிக்கிறது அமெரிக்க கடற்படை

அமெரிக்க- சிறிலங்கா போர்க்கப்பல்கள் இன்று தொடக்கம் 10 நாட்கள் அம்பாந்தோட்டை துறைமுகப் பகுதியில் கூட்டுப் பயிற்சி ஒன்றில் ஈடுபடவுள்ளன.

நான்கு நாடுகளின் தலைவர்களை இன்று சந்திக்கிறார் சிறிலங்கா அதிபர்

இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தென்னாபிரிக்க அதிபர் உள்ளிட்ட நான்கு நாடுகளின் தலைவர்களுடன் இன்று இரதுரப்புப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகள் முக்கியம் – ஐ.நா குழு

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலக பங்களிப்பை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐ.நா குழு கோரியுள்ளது.

வாழ்நாள் முழுமைக்குமான இடம்பெயர்வு

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக,  26 ஆண்டுகளுக்கு முன்னர், வடக்கிலிருந்த தனது வீட்டிலிருந்து துரத்தப்பட்ட பூபாலச்சந்திரன் வதனா தனது அனுபவம் தொடர்பாக விபரிக்கிறார்.

வடக்கு முதல்வருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நடந்த இந்தச் சந்திப்பில், நல்லிணக்க விவகாரங்கள் குறித்துப் பேச்சு நடத்தப்பட்டதாகத் தெரியவருகிறது.

இன்று இந்தோனேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியப் பெருங்கடல் நாடுகள் அமைப்பின், தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

கீத் நொயாரை கடத்திய மேஜர் புலத்வத்தவுக்கு இராஜதந்திரப் பதவி வழங்கிய கோத்தா

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள, சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியான மேஜர் பிரபாத் புலத்வத்த, முன்னைய ஆட்சிக்காலத்தில் உயர்மட்ட இராஜதந்திரப் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படையின் ஆய்வுக் கப்பல் சிறிலங்காவுக்கு இரண்டு மாதப் பயணம்

இந்திய கடற்படையின் நீர்ப்பரப்பு ஆய்வுக் கப்பலான ஐஎன்எஸ் தர்ஷக் இரண்டு மாதகால ஆய்வுப் பயணம் ஒன்றை சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ளது.

அமெரிக்காவுடன் மீண்டும் இரகசிய பாதுகாப்பு உடன்பாட்டுக்கு தயாராகிறது சிறிலங்கா – ஜேவிபி

போர் உதவி வசதிகளுடன் தொடர்புடைய இரகசிய உடன்பாடு ஒன்றை அமெரிக்காவுடன், செய்து கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிப்பதாக ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது.