மேலும்

மாதம்: March 2017

ஆப்கானிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார் முன்னாள் விமானப்படைத் தளபதி

ஆப்கானிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவராக, சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள பதவியேற்றுள்ளார்.

சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன?

சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலராக மூத்த மேலதிக அரச சட்ட ஆலோசகர் கபில வைத்தியரத்ன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான அவசர கூட்டுக் கூட்டம் நாளை வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

இரத்மலானை விமான நிலையம் ஊடாக மீண்டும் அனைத்துலக விமானப் போக்குவரத்து

இரத்மலானை விமான நிலையம் ஊடாக, கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அனைத்துலக விமானப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.

விசாரணையை துரிதப்படுத்துமாறு சிறிலங்காவுக்கு இந்தியா அழுத்தம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கச்சதீவு கடலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துள்ளது.

ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்- ஐரோப்பிய ஒன்றியம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களைக் கடத்திய கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொழும்பில் தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கடத்தப்பட்டு கப்பம் கோரப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படை அதிகாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா விழித்துக் கொள்வதற்கான அழைப்பு – ‘தி ஹிந்து’ ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையை கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டமையானது, சிறிலங்காவின் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விழித்துக் கொள்வதற்கான அழைப்பாகக் கருதப்பட வேண்டும்.

பதற்றத்தை தணிக்க 85 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கிறது சிறிலங்கா

கச்சதீவு அருகே தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்கும் வகையில், தாம் கைது செய்து தடுத்து வைத்துள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய சிறிலங்கா, இந்திய அரசுகள் இணக்கம் கண்டுள்ளன.

யாழ். மாணவர்கள் கொலை வழக்கை வட-கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி வழக்கு

துப்பாக்கிச் சூடு நடத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணத்துக்குக் காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஐந்து சிறிலங்கா காவல்துறையினரும், தம் மீதான வழக்கை வடக்கு- கிழக்கிற்கு வெளியே மாற்றக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.