சிறிலங்கா குறித்த தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.
சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன.
சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் மூன்று நாட்கள் அவசர பயணமாக இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமெரிக்கா மற்றும் மேற்குலத்தை நோக்கி சிறிலங்கா சாய்வதாக சீன கரிசனை கொண்டுள்ள சூழலில் அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
ஐ.நா மனித உரிமைச் சபையில் கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்த சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் உரைக்கு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதிலுரைத்துள்ளார்.
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதியுள்ள ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல், சிறிலங்கா ஆயுதப் படைகளுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பாக சீனா எதிர்பாராதளவு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகிறது.
நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமல் விடக்கூடும் என்று செயலணியின் உறுப்பினர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
தென்னாபிரிக்காவில் உள்ள மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று இயக்குனருமான யஸ்மின் சூக்கா. இவர் ஒரு முன்னணி மனித உரிமைச் சட்டவாளரும் செயற்பாட்டாளரும் கலப்பு நீதிப்பொறிமுறை, பால், அனைத்துலக போர்க் குற்றங்கள் போன்ற பல்வேறு துறைகள் சார் அனைத்துலக வல்லுனராகவும் விளங்குகிறார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பு அனுமதிக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நீதிப் பொறிமுறைகளில் அனைத்துலக நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி, வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று கவனயீர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டன.
மிகக் கொரூரமான சித்திரவதைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் படைமுகாமை இயக்கிய சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஜெனரல்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துமாறு, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளது.