மேலும்

மாதம்: March 2017

சிறிலங்கா குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ரொட்டுக்கு அளித்தது அமெரிக்கா

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம், அமெரிக்காவின் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான முதன்மைப் பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை – சிறிலங்கா அரசுக்குள் முரண்பாடு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு தொடர்பாக அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சாங் வான்குவான் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சிறிலங்கா கடலோரக் காவல்படைக்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள்

சிறிலங்கா கடலோரக் காவல்படையைப் பலப்படுத்துவதற்கு மூன்று ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் கட்டப்படவுள்ளன.

காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை, சரணடைந்ததை யாரும் காணவில்லை – என்கிறார் கோத்தா

சிறிலங்கா அதிபரையோ, பிரதமரையோ அடையாளம் காண முடியாத-  கிராமப்புற தமிழ் மக்களால், இராணுவ அதிகாரி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு எவ்வாறு குற்றம்சாட்ட முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

வெளிநாட்டு நீதிபதிகள் பரிந்துரையை நீக்கும் சிறிலங்காவின் முயற்சி தோல்வி

ஜெனிவா தீர்மானத்தில் இருந்து, வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய பரிந்துரையில் திருத்தம் செய்வதற்கு அல்லது நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அம்பாந்தோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது அமெரிக்க கடற்படைக் கப்பல்

சிறிலங்காவில் இரண்டு வாரங்களாகத் தரித்து நின்று கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்க கடற்படையின் அதிவேகப் போக்குவரத்துக் கப்பலான யுஎஸ்என்எஸ் போல் ரிவர் நேற்று முன்தினம் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

முள்ளிவாய்க்காலில் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார் ரொரன்ரோ மாநகர முதல்வர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் ரொரன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்தினார்.

சிறிலங்கா நம்பகமான, பக்கசார்பற்ற செயல்முறைகளை உறுதிப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

நம்பகமான செயல்முறைகளின் மூலம் சுதந்திரமான பக்கசார்பற்ற நிறுவனங்களை உறுதிப்படுத்துவது முக்கியம் என்று  வலியுறுத்தியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உரிமையைக் குறைக்கிறது சிறிலங்கா?

சீனாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தின் குத்தகை உரிமையை 80 வீதத்தில் இருந்து 60 வீதமாகக் குறைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.