மேலும்

முள்ளிவாய்க்காலில் மலர்வளையம் வைத்து வணக்கம் செலுத்தினார் ரொரன்ரோ மாநகர முதல்வர்

john torry-north-visit (1)சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் ரொரன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, இறுதிப்போரில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் வணக்கம் செலுத்தினார்.

நேற்றுக்காலை முல்லைத்தீவுக்குச் சென்ற ரொரன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, முள்ளிவாய்க்காலில், இறுதிப்போரில் உயிரிழந்த மக்களுக்காக மலர் வளையம் வைத்து, சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் ரொரன்ரோ நகரசபை உறுப்பினர் நீதன் சன் ஆகியோரும் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.

john torry-north-visit (1)john torry-north-visit (3)

இதையடுத்து, காணாமலாக்கப்பட்டவர்களின் கதியை அறியத் தரக்கோரி, முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களின் உறவுகளையும், ரொரன்ரோ மாநகர முதல்வர் சந்தித்துக் கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *