மேலும்

ஜெனிவா தீர்மானத்தை கடும் கண்காணிப்புடன் நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

tna-meeting-vavuniya (1)ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக சிறிலங்கா நிறைவேற்றுவதை உறுதிப்படுத்துமாறும், அதனைக் கண்காணிக்க சிறிலங்காவில் பணியகம் ஒன்றை நிறுவுமாறும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.

வவுனியாவில் இன்று காலை 10 மணி  தொடக்கம் மாலை 4 மணி வரை நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான ஒருங்கிணைந்த கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

காரசாரமான வாதப்பிரதிவாதங்களுடன் இன்றைய கூட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்தக் கூட்டத்துக்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தக் கூட்டத்துக்கு வருகை தரவில்லை.

இந்தக் கூட்டத்தின் முடிவில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

tna-meeting-vavuniya (1)tna-meeting-vavuniya (2)

அதில், “ஐ.நா மனித உரிமைப் பேரவையில் 2015 ஐப்பசி  1ம் திகதி சிறிலங்கா அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்ட அத்தனை விடயங்களும் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும்.

இவை கடுமையான நிபந்தனைகளின் கீழ் நிறைவேற்றப்படுவதை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், பணியகம்  ஒன்றை சிறிலங்காவில்  நிறுவி மேற்பார்வை செய்ய வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் மேற்சொன்ன விடயங்களை தகுந்த பொறிமுறையின் மூலம் நிறைவேற்றத் தவறினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தத் தீர்மானத்தின் கீழ் கிடைக்க வேண்டிய அனைத்து பெறுபேறுகளும் கிடைக்கும் வண்ணமாக அனைத்துலக பொறிமுறைகளை ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதி செய்ய வேண்டும்,

மேற்படி தீர்மானங்களுக்கு ஈபிஆர் எல் எப் இணங்கவில்லை என கௌரவ நடேசு சிவசக்தி (பா.உ) தெரிவித்தார்.” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *