யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற மறுத்த சிறிலங்கா படைகள் – சிஐஏ ஆவணத்தில் தகவல்
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படைகள் இரண்டு தடவைகள் மறுப்புத் தெரிவித்தமையால், இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதாக, முன்னாள் சிறிலங்கா அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியிருக்கிறார்.


