மேலும்

வெளிநாட்டு முதலீடுகள் ஏற்படுத்தும் தாக்கங்கள் – சிறிலங்கா கொள்கை வகுப்பாளர்கள் ஆய்வு

INSSSLபெரும் எண்ணிக்கையான வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரசன்னம் என்பவற்றினால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் தொடர்பாக சிறிலங்காவின் அதிகாரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் ஆய்வு நடத்தியுள்ளனர்.

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவகத்தினால், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் கடந்த வாரம் இதுபற்றிய ஆய்வு கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பான வழிகாட்டு முறைகள் விடயத்தில் முகவர் அமைப்புகளுக்கிடையில் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் தெற்காசியாவில் ஏற்படக் கூடிய பாதுகாப்பு  தாக்கங்கள் தொடர்பான இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பெருமளவில் வெளிநாட்டு திட்டங்கள், அதிகரிப்பது, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும். இவை நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் உறுதிப்பாட்டுக்கும் ஊக்கியாக இருந்தாலும், சில திட்டங்களின் நோக்கங்கள் ஆபத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.

எனவே தனியார் முதலீட்டாளர்கள் குறித்த வர்த்தக முடிவுகளை எடுக்கும் போது, தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

பெரியளவிலான மூலோபாயத் திட்டங்கள் நாட்டின் தேசிய பாதுகாப்பில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்று சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் அசங்க அபேகுணசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டின் நீண்டகால பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வாளர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மூலோபாயத்  வெளிநாட்டுத் திட்டங்கள் குறித்து முடிவு செய்யும் போது, பாதுகாப்பு அனுமதி தேவை என்றும், இதற்கு சீனா போன்ற ஏனைய நாடுகளால் பிற்பற்றப்படும் வழிமுறைகள்  குறித்த உதாரணங்களை தேசிய பாதுகாப்புக் கற்கைகள் நிறுவகத்தின் ஆய்வாளர் ரனுக் மென்டிஸ் எடுத்து கூறியுள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வவையில் வரும் வெளிநாட்டு பணியாளர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். இது சமூக முரண்பாடுகளை ஏற்படுத்தும். அதைவிட, தீவிரவாதத்துக்கான பயிற்சிகளை அளிக்கும் மையமாகவும் சிறிலங்கா மாற்றப்படும் நிலையும் ஏற்படும் என்றும் இந்தக் கூட்டத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *