திருப்பதியில் சிறிலங்கா பிரதமர்
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திருப்பதி சென்றடைந்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று திருப்பதி சென்றடைந்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் காணிகளை அபகரிக்க சீனா முனைவதாக, மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் சீன அரசாங்கம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்கா கடற்படைக்கு கப்பல் ஒன்றை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஜப்பானின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் ஹிரோயுகி மியாசாவா, இதனைத் தெரிவித்துள்ளார் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவாளர்களின் பிரசன்னமின்றி ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதித்தல் உள்ளடங்கலாக பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ள, சிறிலங்கா அரசாங்கத்தால் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக ஐ.நா அதிருப்திகளை வெளியிட்டுள்ளதாக சிறிலங்காவிற்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி உனா மக்காலி தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம் சீனாவுடன் கூட்டாக இணைந்து செயற்படுவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நிச்சயம் குழப்பத்துக்கு உள்ளாக்கியிருக்கும் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜப்பான்- சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கலந்துரையாடல் நேற்று கொழும்பில் உள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவின் அழைப்பின் பேரில், ஜப்பானிய பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இந்த கலந்துரையாடலில் பங்கேற்றது.
சிறிலங்காவின் பிரதான அனைத்துலக விமான நிலையமான, பண்டாரநாயக்க அனைத்துலக விமான நிலையத்தின் அனைத்துச் செயற்பாடுகளும், எதிர்வரும் ஜனவரி 6ஆம் நாள் தொடக்கம், காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை மூடப்படவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்யும் சதித் திட்டம் ஒன்றுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் நடத்திய முன்னாள் கடற்படைச் சிப்பாய் விஜிதமுனி ரோகண தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பாக, சீனாவுடன் கூட்டு எதிரணி பேச்சு நடத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்தியே என்று சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.