மேலும்

புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை மகிந்த விரும்பவில்லை – சிவ்சங்கர் மேனன்

shivshankar-menonவிடுதலைப் புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை என்று, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இறுதிக்கட்டப் போரின் போது, இந்திய வெளிவிவகாரச் செயலராக பணியாற்றிய சிவ்சங்கர் மேனன் எழுதி வெளியிட்டுள்ள Choices: Inside the Making of India’s Foreign Policy என்ற நூலிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

”எந்த வடிவத்திலான அனைத்துலக நடுநிலையையும், போர்நிறுத்தத்தையும், விடுதலைப் புலிகள் விரும்பியிருந்தனர்.

எனினும், புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதையோ, விசாரணைகள் செய்வதற்காக அவர்களை கைதிகளாகப் பிடித்து வைப்பதையோ சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்பவில்லை.

அதன் மூலம், விடுதலைப் புலிகளின் தலைமை இன்னொரு போருக்குத் தயாராக முடியும்” என்று மகிந்த ராஜபக்ச ராஜபக்ச நம்பியதாக, சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கருத்து “புலிகளின் தலைவர்கள் உயிருடன் இருப்பதை மகிந்த விரும்பவில்லை – சிவ்சங்கர் மேனன்”

  1. மனோ says:

    கூட்டுக் கொலைகாரன் வேறு எப்படிப் பேசித் தப்பிக்க முடியும் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *