மேலும்

இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீருடன் ஜெயலலிதா உடல் சென்னை மெரீனாவில் அடக்கம்

jaya-last-1மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உடல் இலட்சணக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில், சென்னை மெரீனா கடற்கரையில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

இன்று காலை 6 மணியளவில் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட ஜெயலலிதாவில் உடலுக்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பல்வேறு மாநிலங்களில் முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என இலட்சக்கணக்கானோர் ராஜாஜி அரங்கில் அஞ்சலி செலுத்தினர்.

மாலை 4.30 மணியளவில் ஜெயலலிதாவின் உடல் முப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பீரங்கி வாகனத்தில் ஏற்றப்பட்டது.

வழிநெடுக காத்திருந்த இலட்சக்கணக்கான மக்களைக் கடந்து செல்வதில் ஏற்பட்ட தாமதத்தினால், சுமார் 5.30 மணியளவிலேயே, ஜெயலலிதாவின் உடலைத் தாங்கிய ஊர்தி மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜிஆர்.சமாதி வளாகத்தை சென்றடைந்தது.

jaya-last-1

jaya-last-2jaya-last-3jaya-last-4jaya-last-5jaya-last-1

அங்கு சந்தனப்பேழையில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு சமயச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்திய அரசின் சார்பில் ஆளுனர் வித்தியாசாகர்ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இறுதி வணக்கம் செலுத்தினர்.

இதையடுத்து, ஜெயலலிதாவின் உடலுக்கு அவரது தோழி சசிகலா, இறுதிச்சடங்குகளை செய்தார்.

இராணுவ மரியாதை செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் தீர்க்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் சந்தனப்பேழை மூடப்பட்டு, ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர் சமாதிக்கு அருகேயுள்ள குழியில் அடக்கம் செய்யப்பட்டது.

பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டு நின்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  கண்ணீருடன் விடை கொடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *