மேலும்

மாதம்: November 2016

9 ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட மிகின்லங்கா

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட மிகின்லங்கா விமான சேவை, ஒன்பது ஆண்டுகளில் 18 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவப் புரட்சி என்று படையிரைக் கேவலப்படுத்தாதீர் – எதிரணியிடம் எஸ்.பி. திசநாயக்க கோரிக்கை

இராணுவப் புரட்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறி, சிறிலங்கா படையினரை கேவலப்படுத்த வேண்டாம் என்று கூட்டு எதிரணியினரிடம் தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க.

ஐ.நாவில் சிறிலங்காவின் படுதோல்வி

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான ஆணைக்குழுவின் 59வது கூட்டத்தொடர் நவம்பர் 07 தொடக்கம் டிசம்பர் 07 வரை சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் இடம்பெறுகிறது. அண்மையில் இந்த ஆணைக்குழு சிறிலங்காவில் நிலவும் சித்திரவதைகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன் இன்னமும் அங்கு நிலைமை சீரடையவில்லை எனவும் அறிவித்தது.

வரும் மே 12இல் சிறிலங்காவில் ஐ.நா வெசாக் நாள் நிகழ்வு – மோடியும் பங்கேற்கிறார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கும், ஐ.நா வெசாக் நாள் நிகழ்வுகள் அடுத்த ஆண்டு மே 12ஆம் நாள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் என்று,  சிறிலங்காவின் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயம் – இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவுடன் உடன்பாடு

அம்பாந்தோட்டை சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பாக சீனாவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்காவின் அனைத்துலக வர்த்தக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு நிலைமையை கட்டுப்படுத்த தவறினால் ஆபத்து – எச்சரிக்கிறார் கமால் குணரத்ன

வடக்கு, கிழக்கில் தற்போது தோன்றியுள்ள நிலைமையைக் கட்டுப்படுத்தத் தவறினால், பாரிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன.

“நீங்கள் இப்போது சிறுபான்மையினர்” – மணலாறு சிங்களக் குடியேற்றவாசிகளை உசுப்பேற்றிய மகிந்த

சிங்களவர்களைச் சிறுபான்மையினராக்குவதற்கு, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் சதி செய்வதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் இராணுவப் புரட்சி – எச்சரித்தார் தினேஸ், நிராகரித்தார் ராஜித

சிறிலங்காவில் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதாக, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன எச்சரித்துள்ளார்.

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் 585 மில்லியன் டொலரைச் செலவிட்ட அமெரிக்கா

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு, 585 மில்லியன் டொலரைச் செலவிட்டுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண வசதிகள்

வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, விமானப் பயண வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.