மேலும்

அமெரிக்க அதிபர் தேர்தல் – முந்தினார் ஹிலாரி

us-election

அமெரிக்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் முன்னிலை வகிப்பதாக பிந்திய முடிவுகள் கூறுகின்றன. (காலை 6.30 மணி நிலவரம்)

மொத்தமுள்ள 50 மாநிலங்களில் 14 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஹிலாரி கிளின்டனுக்கு 68 தேர்தல் கல்லூரி ஆசனங்களும், டொனால்ட் ட்ரம்புக்கு 57 தேர்தல் கல்லுரி ஆசனங்களும் கிடைத்துள்ளன.

முந்திய செய்தி

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில்

அமெரிக்காவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலின் முதல் கட்ட முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ள நிலையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளர்  டொனால்ட் ட்ரம்ப் மு்ன்னிலையில் இருக்கிறார்.

அமெரிக்காவின் கிழக்கு மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்து முடிவுகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. சற்று முன்னர் வெளியான முதற்கட்ட முடிவுகளின்படி, கென்டகி, இன்டியானா, வேர்ஜீனியா மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

வேமொன்ட் மாநிலத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் முன்னிலையில் உள்ளார்.

இதுவரையில் அறிவிக்கப்பட்ட  முதற்கட்ட முடிவுகளின் படி டொனால்ட் ட்ரம்ப் 24 தேர்தல் கல்லூரி வாக்குகளையும் (52 வீதம்)  , ஹிலாரி கிளின்டன் 3  வாக்குகளையும் ( 45 வீதம்) பெற்றுள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறைந்தபட்சம் 270 தேர்தல் கல்லூரி வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *