மேலும்

பிரித்தானிய வெளிவிவகார, கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக அலோக் சர்மா நியமனம்

Alok Sharmaபிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரெசா மே, ஆசிய – பசுபிக் விவகாரங்களைக் கையாளும், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சர்மாவை நியமித்துள்ளார்.

அண்மையில் பதவி விலகிய டேவிட் கமரூன் அரசாங்கத்தில், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்த, ஹியூகோ ஸ்வயருக்கு, புதிய அரசாங்கத்தில் இடமளிக்கப்படவில்லை.

ஹியூகோ ஸ்வயர், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்த போது, சிறிலங்காவின் மனித உரிமை விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துபவரான இருந்து வந்தார்.

இந்த நிலையில், புதிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக, நியமிக்கப்பட்டுள்ள அலோக் சர்மா, ஆசிய பசுபிக் பிராந்தியம் உலகின் மிக முக்கியமான பகுதி என்றும், பிரித்தானியாவின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்கு இந்தப் பகுதி முக்கிய பங்கு வகிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பகுதியில் புதிய நண்பர்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற எண்ணியுள்ளதாகவும், வர்த்தக உறவுகள், முதலீட்டு வாய்ப்புகளை வலுப்படுத்துவது, மற்றும் பிராந்தியத்தில் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்பவற்றில் கவனம் செலுத்தப் போவதாகவும், அலோக் சர்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *