மேலும்

சிறிலங்காவுக்கு வக்காலத்து வாங்கும் சமந்தா பவர் – அனைத்துலக ஊடகம்

samantha- malikவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் அதிகரித்துள்ள கைதுகள், கடத்தல்கள் போன்றன அமெரிக்காவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். பத்தாண்டு காலத்தில் ராஜபக்சவால் இழைக்கப்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் தற்போதைய ஆட்சியில் தொடர்கிறது என்கின்ற செய்தி அமெரிக்காவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

இவ்வாறு The diplomat ஊடகத்தில், Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

கடந்த வியாழனன்று அமெரிக்கா மற்றும் சிறிலங்கா ஆகியன வோசிங்ரனில் மிக முக்கிய சந்திப்பை மேற்கொண்டன. வர்த்தகம், முதலீடு, இரு தரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதில் கலந்துரையாடப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சமந்தா பவரும் இச்சந்திப்பில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிலிருந்து வந்திருந்தார்.

பொருளாதார விவகாரங்களை மையப்படுத்திய இந்தச் சந்திப்பில் சமந்தா பவர் கலந்து கொண்டமைக்கான காரணம் என்ன என்கின்ற கேள்வி இங்கு எழுகிறது.

‘கடந்த வியாழனன்று சிறிலங்கா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டுச் செயற்பாட்டுத் திட்டமானது தொடர்ந்தும் சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது தனது கடப்பாடான மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் பொறுப்புக்கூறல் போன்றவற்றை எவ்வாறு மேற்கொள்ளவுள்ளது என்பது தொடர்பில் சிறிலங்காவுடன் அமெரிக்கா தொடர்ந்தும் தொடர்பைப் பேணும் என்பதையே உறுதி செய்கின்றது. இவ்வாறான விடயங்களை அமெரிக்கா தொடர்ந்தும் முக்கியத்துவப்படுத்தும் என்பதையே சமாந்தா பவர் இச்சந்திப்பில் கலந்து கொண்டமையைச் சுட்டிநிற்கிறது’ என அமெரிக்க வர்த்தகச் செயற்பாடுகளுக்கான அலுவலகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 2015ல் இடம்பெற்ற அதிபர் தேர்தலின் மூலம் சிறிலங்காவின் புதிய அதிபராக மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதிலிருந்து சிறிலங்காவுடனான அமெரிக்காவின் உறவானது சிறப்பாகப் பேணப்பட்டு வருகின்றது என்பதில் எவ்வித இரகசியமும் இல்லை. எனினும், சிறிலங்காவுடனான உறவுநிலையை அமெரிக்கா தொடர்வதற்கான உண்மை என்ன என்பதை சமாந்தா பவர் பின்வருமாறு விபரிக்கிறார்:

‘நிச்சயமாக, நாங்கள் (அமெரிக்கா மற்றும் சிறிலங்கா) இன்று நம்பமுடியாத அளவுக்கு சாதகமானதொரு சூழ்நிலையைத் தக்கவைத்திருப்பதற்கான முக்கிய காரணம் சிறிலங்கா கடந்த 2015 ஜனவரியிலிருந்து பல்வேறு வழிகளில் மாற்றமுற்றுள்ளமையே ஆகும். 2016 ஜனவரியில் புதியதொரு ஆட்சிக்காக இலங்கையர்கள் தமது வாக்குகளை வழங்கியிருந்தனர். சிறிலங்காவின் புதிய தலைமையானது நிலையான சமாதானம், பொறுப்புள்ள ஜனநாயகம், உலக நாடுகளுடனான புதிய உறவு போன்றவற்றுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதுடன், இதன்மூலம் பல்வேறு வாய்ப்புக்களையும் விரிவுபடுத்தியுள்ளது’ என சமாந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.

போருக்குப் பின்னான சிறிலங்காவில் மிகப் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள போர்க்கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டும் என அமெரிக்கா மிகத் தெளிவாக சிறிலங்காவிடம் அழைப்பு விடுப்பதற்குப் பதிலாக, ‘பொறுப்புள்ள ஜனநாயகம்’ என்கின்ற வார்த்தையைத் தற்போது பிரயோகித்து வருவதை இலங்கையர்கள் அவதானிக்க முடியும். சிறிலங்கா மீதான அமெரிக்காவின் இத்தகையான நிலைப்பாட்டு மாற்றமானது தொடர்கிறது. அமெரிக்க அரசாங்கமானது தற்போதும் போர்க் கால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு இதயசுத்தியுடன் சிறிலங்கா மீது அழுத்தம் கொடுத்து வருகிறதா?

சிறிசேனவின் தலைமையின் கீழ் சிறிலங்கா மேற்கொண்டுள்ள பல்வேறு ‘அசாதாரண முன்னேற்றங்கள்’ தொடர்பாக சமந்தா பவர் கூறியுள்ளார். ‘சிறிலங்கா 2015 ஜனவரியிலிருந்து மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் போன்றவற்றில் ‘உலக சம்பியனாக’ முன்னேறியுள்ளது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

பவரின் ‘மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான உலக சம்பியன்’ என்பது எதைக் குறிக்கின்றது?

சிறிலங்கா எவ்வாறு எப்போது மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ‘உலக சம்பியனாக’ மாறியது என்கின்ற செய்தி தெளிவற்றது எனினும், சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் நிலவிய அதிகாரத்துவ ஆட்சியைக் குறைத்துள்ளது.

ஆழமானதொரு மாற்றத்தை நோக்கி சிறிலங்கா பயணிப்பதற்காக நாங்கள் தற்போதும் காத்திருக்கிறோம் என்பதே உண்மை. தவிர, தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மையில் அதிகரித்துள்ள கைதுகள், கடத்தல்கள் போன்றன அமெரிக்காவிற்கு எச்சரிக்கை மணியை எழுப்ப வேண்டும். பத்தாண்டு காலத்தில் ராஜபக்சவால் இழைக்கப்பட்ட தமிழர் எதிர்ப்பு நடவடிக்கை மீண்டும் தற்போதைய ஆட்சியில் தொடர்கிறது என்கின்ற செய்தி அமெரிக்காவின் காதுகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

‘அமெரிக்கா பொருளாதார வளர்ச்சியைத் தளமாகக் கொண்டு மேலும் பல்வேறு உதவிகளை சிறிலங்காவிற்கு வழங்குவதற்கான வாய்ப்பை ஆராய்ந்து வருகிறது’ என பவர் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சியின் மூலம் அனைவரும் பயன்பெற முடியும் என்பது உண்மைதான். ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற மிகவும் சர்ச்சைக்குரிய போர்க் கால மீறல்கள் தொடர்பாக அமெரிக்கா முன்னுரிமைப்படுத்தவில்லை என்பதே இங்கு பிரச்சினையாகும். ‘கலப்பு நீதிப் பொறிமுறை’ என்கின்ற விடயத்தை மட்டுமே பவர் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்கா இது தொடர்பான சவால்களை மிகக் கவனமாக உற்றுநோக்கி வருகிறது என பவர் தெரிவித்தார்.

கெட்டவாய்ப்பாக, சிறிசேன அரசாங்கம் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் ஏற்கனவே முற்றிலும் மாறுபட்டதொரு தீர்மானத்திற்கு வந்திருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *