மேலும்

Tag Archives: ஞானசார தேரர்

இன்று விடுதலையாகிறார் ஞானசார தேரர்

பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் ஆவணங்களில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை ஒப்பமிட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவி்ல் பிறந்திருந்தால் புலியாகிப் போராடியிருப்பேன் – ஞானசார தேரர்

முல்லைத்தீவி்ல் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக, புலியாகிப் போராடியிருப்பேன் என்று பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுமன்னிப்பு பட்டியலில் அரசியல் கைதிகள், ஞானசார தேரர் இல்லை

சிறிலங்காவின் 71ஆவது சுதந்திர நாளை முன்னிட்டு, 545 சிறைக்கைதிகள் இன்று பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர்.

ஞானசார தேரரின் விடுதலை – மைத்திரி கொடுத்துள்ள வாக்குறுதி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவினரை, விடுவிப்பது குறித்து சட்டமா அதிபருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி மறுப்பு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

சிறைக்கைதிகளுக்கான உடையில் ஞானசார தேரர்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சிறைக் கைதிகள் அணியும் ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஞானசார தேரர் பிணையில் விடுதலை

ஆறு மாதங்கள் அனுவிக்கும் வகையில் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தேஞானசார தேரர் நேற்று ஹோமகம நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி வெடிக்கிறது போராட்டம்

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத்தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது பலசேனா அறிவித்துள்ளது.

ஞானசார தேரர் குற்றவாளியாக அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி, சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்றத்துக்குள் வைத்து அச்சுறுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட, பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மகாசோன் படையணித் தலைவரைச் சந்தித்தார் ஞானசார தேரர்

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளைத் தூண்டி விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மகாசோன் படையணியின் தலைவர் மற்றும், செயற்பாட்டாளர்களை பொதுபல சேனாவின் பொதுச்செயலர் கலகொடஅத்தேமம ஞானசார தேரர் சந்தித்துள்ளார்.