மேலும்

நாள்: 11th December 2015

அற,அறிவு வலிமைகளை அரசியல் வலிமையாக மாற்றுவோம் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்

மலரும் 2016 ஆம் ஆண்டு, சுதந்திரவேட்கையின் குறியீடாக சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான அரசியல் அமைப்பினை நாம் உலகத் தமிழ் மக்களை இணைத்த வண்ணம் எழுதுவதற்குத் தீர்மானித்துள்ளோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். 

ஐதேக உறுப்பினர் முஜிபுர் ரகுமானை நாடாளுமன்றத்துக்குள் தாக்க முயன்ற எதிர்க்கட்சியினர்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உரையாற்றிக் கொண்டிருந்த போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரைத் தாக்க முயற்சித்தனர்.

கூட்டமைப்புக்கு வழங்கிய மற்றொரு வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டார் மைத்திரி

யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் உறுப்பினரான அங்கஜன் இராமநாதனை சிறிலங்கா அதிபர் நியமித்துள்ளார்.

தாய்த் தமிழக உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டுவோம் – சிவராம் ஞாபகார்த்த மன்றம்

இன்று தாய்த் தமிழக உறவுகள் துயரத்தில் இருக்கும் போது நாம் நேசக்கரம் நீட்டத் தவறுவோமேயானால் பிரித்தாளும் தந்திரத்தை உபயோகித்து எம்மை நிரந்தரமாகவே பிரித்துவிட முயலலாம்.  அதற்கு இடங்கொடாது எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தக் கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தக் கொள்ள வேண்டும்.

அமெரிக்க சிறிலங்கா உறவுகளின் எதிர்காலம் – அனைத்துலக ஊடகம்

சில ஆண்டுகளுக்கு முன்னர் மியான்மாரின் ‘திறந்த ஜனநாயகம்’ தொடர்பில் ஏற்பட்ட கசப்பான பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா மீண்டும் நினைவுபடுத்தத் தவறியுள்ளது. அதாவது மியான்மாரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய சில பாடங்களை சிறிலங்கா விடயத்தில் அமெரிக்கா அசட்டை செய்துவருகிறது.

மற்றொரு அமெரிக்க உயர்அதிகாரி அடுத்த வாரம் சிறிலங்கா வருகிறார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகரான தூதுவர் தோமஸ் சானொன் சிறிலங்காவுக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  வரும் 14ஆம் நாள் தொடக்கம், 16ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையை ஓரம்கட்டிய மைத்திரி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் புறக்கணித்து விட்டு, ஏனைய மாகாணங்களின் முதலமைச்சர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருக்கிறார் சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

அமெரிக்க குழுவை கடற்படை முகாமுக்குள் அனுமதிப்பதே குற்றம் – என்கிறார் ராஜித சேனாரத்ன

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் அமெரிக்க குழுவை அனுமதிப்பதே தவறு, ஐ.நா.குழுவினரை அனுமதித்ததால் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என்று சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

காணிகளை விடுவிப்பது குறித்து இராணுவத்துடன் பேச்சு நடத்துகிறதாம் அரசு – ரணில் கூறுகிறார்

வடக்கில் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இராணுவத்துடன் பேச்சு நடத்தி வருவதாகவும், அடுத்த மாதமளவில் மீதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.