வேதனை வடியவில்லை வேண்டுமா புத்தாண்டு ?
வெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை. வெள்ளம் விட்டுச் சென்ற தீப்புண்கள் ஆற தலைமுறைகள் ஆகலாம். சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக்காயமாய் நின்று கொண்டிருக்கிறது ; நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டுஎழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது. – தமிழ்நாட்டில் இருந்து புதினப்பலகைக்காக பா.செயப்பிரகாசம்.