மேலும்

நாள்: 17th December 2015

தொழில் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 91ஆவது இடம்

தொழில் செய்வதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியலில், சிறிலங்கா 91ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ்  வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டுக்கான பட்டியலிலேயே சிறிலங்கா 91ஆவது இடத்தில் உள்ளது.

பணிந்தது சிறிலங்கா அரசு – குரோதப் பேச்சு சட்டமூலத்தை விலக்கிக் கொண்டது

குரோதத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிடுவதை தடை செய்யும், வகையில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சட்டமூலத்தை விலக்கிக் கொள்வதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராணுவ வட்டத்திற்குள் நுழைகிறது இந்தியா

பாதுகாப்பு கூட்டணிகளை உத்தியோகபூர்வமாக தவிர்த்து வரும் இந்தியா தற்போது ஜப்பானுடன் மேற்கொண்டுள்ள பல்வேறு ஒப்பந்தங்களின் மூலம் அமெரிக்காவின் இராணுவ வட்டத்திற்குள் உள்நுழைவதற்கான தருணத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரண உதவியைப் பெறுவது குறித்து இந்தியா பரிசீலனை

தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்கு மாகாணசபையினால், திரட்டப்படும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவில் சுமுகமான அதிகார மாற்றம் – 2015இன் சாதனை என்கிறார் பான் கீ மூன்

சிறிலங்காவில் கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும், சுமுகமான அதிகாரக் கைமாற்றமும் அரசியல் முன்னேற்றங்களும் ஏற்பட்டது ஊக்கமளிப்பதாக உள்ளது என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இராமேஸ்வரம்- தலைமன்னார் தரைவழிப் பாதையை அமைப்பதில் இந்தியா கவனம் – நிதின் கட்காரி

இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைப்பது தொடர்பான திட்டத்தில் இந்தியா கவனம் செலுத்தியிருப்பதாக, இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.