மேலும்

நாள்: 1st December 2015

போர்க்குற்றங்களுக்கு உயர்மட்டப் படை அதிகாரிகளே பொறுப்பு – சந்திரிகா குமாரதுங்க

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மீதே பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

பூகோள காலநிலை மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பாரிசில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். பூகோள காலநிலை மாநாட்டின் போதே நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்திய இராணுவத் தளபதியை யாழ். வரவிடாமல் தடுத்தது மழை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று யாழ்ப்பாணம் செல்லத் திட்டமிட்டிருந்த போதிலும், அந்தப் பயணம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் தொழில்நுட்ப உதவி – விபரங்களை வெளியிட சிறிலங்கா இராணுவம் மறுப்பு

சிறிலங்கா இராணுவத்தை நவீன மயப்படுத்துவதற்கு, இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் அளிக்க முன்வந்துள்ள தொழில்நுட்ப உதவிகள் தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிட சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ளார்.

சிறிலங்கா இல்லாத பட்டுப்பாதை திட்டம் வெற்றிபெறாது – சீன அதிகாரி

சிறிலங்கா இல்லாத சீனாவின் பட்டுப்பாதை திட்டம் வெற்றிகரமானதாக அமைய முடியாது என்று சீனாவின் யுனான் மாகாண அரசாங்கத்தின், வெளிவிவகாரப் பணியக தலைமை ஆலோசகர் ஜின் செங் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா வந்துள்ள அமெரிக்க தீவிரவாத முறியடிப்பு நிபுணர்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் தீவிரவாத முறியடிப்பு நிபுணர் ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நௌருவில் மரத்தில் ஏறிப்போராட்டம் நடத்திய தமிழ் அகதி சிறையில் அடைப்பு

நௌரு தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் மரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்தியதால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோத்தாவைக் காப்பாற்ற பொய்ச்சாட்சியம் அளித்த மேஜர் ஜெனரல் சிக்கினார்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைக் காப்பாற்றுவதற்காக, அதிபர் ஆணைக்குழு முன்பாக பொய்ச்சாட்சியம் அளித்த, சிறிலங்காவின் முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர மீது காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய இராணுவத் தளபதியின் இரகசிய நிகழ்ச்சிநிரல் – இன்று யாழ்ப்பாணம் செல்கிறார்

சிறிலங்காவுக்கான மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக் இன்று யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவுள்ளார்.