மேலும்

நாள்: 3rd December 2015

ஊடகங்களையும் முடக்கியது சென்னைப் பெருவெள்ளம்

சென்னையில் ஏற்பட்டள்ள பெருவெள்ளத்தினால், இந்தியாவின் பழம்பெரும் நாளிதழான ‘தி ஹிந்து’ 137 ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று வெளிவரவில்லை. அத்துடன் ஜெயா மற்றும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிகளும் சேவையை நிறுத்தியுள்ளன.

சென்னை வெள்ளத்தில் ஈழத்தமிழர்களும் அந்தரிப்பு

சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கொட்டி வரும் பெருமழை மற்றும் வெள்ளத்தினால், ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். போரினால் இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் சென்னை நகர் மற்றும் பறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை – இலட்சக்கணக்கான மக்கள் தவிப்பு

முன்னெப்போதும் இல்லாத வகையில் பெய்து வரும் வரலாறு காணாத பெருமழையால், சென்னை மாநகரமே, வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளது. இதனால், கட்டடத் தீவுகளாக சென்னை நகரம் காட்சி அளிக்கிறது. இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, இருப்பிடம், உணவு, அடிப்படை வசதிகளின்றித் தவித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள் – சென்னை விமான நிலைய காட்சிகள்

சென்னையில் கொட்டிவரும் பெருமழையால், ஏற்பட்டுள்ள வெள்ளத்தை அடுத்து சென்னை விமான நிலையத்தின் ஓடுபாதைகளில் விமானங்கள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன.

மூன்றில் இரண்டு ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்

சிறிலங்கா அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.