மேலும்

நாள்: 8th December 2015

சென்னை வெள்ளம் காவு கொண்ட இணையத் தமிழ் முன்னோடி ‘ஸ்ரீநிவாஸ்’

கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது. ஸ்ரீநிவாஸ் – தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர்.

கூட்டமைப்பைப் பிளவுபடுத்த அரசதரப்பு சதியா? – சம்பந்தன் விளக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வேற்றுமையை ஏற்படுத்துவதன் ஊடாக அரசியல் தீர்வினை தவிர்த்துக் கொள்ள சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள எவரேனும் முயற்சிக்கலாம். இதற்கு நாங்கள் பலியாகக் கூடாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருகிறது கூட்டமைப்பு

13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிளிநொச்சியில் கொட்டும் பெருமழை – நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம்

தொடர்ந்து கொட்டி வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரகீத் கடத்தலுடன் தொடர்புடைய மேஜர் உள்ளிட்ட மேலும் இரு புலனாய்வு அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவர் உள்ளிட்ட மேலும் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கில் காடுகள் அழிப்பை ஆராய அதிகாரிகள் குழு – சிறிலங்கா அதிபர் அனுப்புகிறார்

வடக்கில் நடந்து வரும் சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு மற்றும், மீள்குடியேற்றம் தொடர்பாக நேரடியாகஆராய அதிகாரிகள் கொண்ட குழுவொன்று அமைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

திருகோணமலைக் கடலில் கடற்படை, விமானப்படை தொடர்ந்து தேடுதல்

திருகோணமலைக் கடலில் மோசமான காலநிலைக்கும் மத்தியில் சிறிலங்கா கடற்படையும், விமானப்படையும் சடலங்களைத் தேடும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சென்னைக்கான விமான சேவையை இன்று மீண்டும் ஆரம்பிக்கிறது சிறிலங்கன் எயர்லைன்ஸ்

சென்னைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் ஒரு வாரத்துக்குப் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது.