மேலும்

நாள்: 9th December 2015

சரத் பொன்சேகா வெளியிட்ட படங்கள் – அதிர்ச்சியில் விஜேதாச ராஜபக்ச

அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி குடும்பத்தினரும், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச குடும்பத்தினரும், ஒன்றாக அமெரிக்காவில் சுற்றுலா சென்றதைக் காட்டும் படங்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா.

சிறிலங்கா ஆயுதப்படைகளை மறுசீரமைப்பதை பிரித்தானியா கண்காணிப்பது ஆபத்தானது – பீரிஸ்

சிறிலங்கா ஆயுதப்படைகளை தரமுயர்த்துவதற்கு, 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள பிரித்தானியா, இதனைக் கண்காணிக்க புதுடெல்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமிக்கவுள்ளமை,  தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் சீபா உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாது – ரணில் அறிவிப்பு

இந்தியாவுடன் சீபா எனப்படும், விரிவான பொருளாதார பங்குடமை உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியா, சீனா இடையே சிறிலங்கா அமைக்க விரும்பும் பாலம்

இந்திய மாக்கடலின் செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்குப் போட்டியிடும் ஆசியாவின் மிகப் பாரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா ஆகிய  நாடுகளை இணைப்பதற்கான பாலமாக செயற்பட சிறிலங்கா முனைவதாக சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

தடைநீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் – ருவான் விஜேவர்த்தன

அண்மையில் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று சிறிலங்காவின்  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

எல்லா தமிழர்களையும் புலிகளாகப் பார்க்கவில்லை – சிறிலங்கா அரசு

தமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் புதிய கோணத்திலேயே தற்போதைய அரசாங்கம் நோக்குகிறது என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

சீனாவுடனான நெருங்கிய மத உறவுகளை வெளிப்படுத்த சிறிலங்காவில் புதிய பௌத்த தொலைக்காட்சி

சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான மத உறவுகளை வெளிப்படுத்தும் வகையில், புதிய பௌத்த தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவைகள் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூரில் சிகிச்சையை முடித்து நாடு திரும்புகிறார் மன்னார் ஆயர்

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் மன்னார் ஆயர் இராயப்பு யோசெப் ஆண்டகை, நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.