மேலும்

நாள்: 13th December 2015

இந்தியாவிடம் தொடருந்துகள் கொள்வனவு செய்யும் திட்டத்தை இடைநிறுத்தினார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவில் இருந்து, தொடருந்து இயந்திரங்கள், பெட்டிகள் மற்றும் பேருந்து இயந்திரங்கள், மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தி வைத்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் – சீனாவுக்கு சிறிலங்கா நிபந்தனை

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம், சீனாவிடம் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முற்றுகிறது முறுகல் – சிறப்புத் தூதுவரை கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா

பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய சிறிலங்கா திட்டமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, சிறப்புத் தூதுவர் ஒருவரை கொழும்புக்கு அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய நிறுவனத்துக்கான கொடுப்பனவை இடைநிறுத்தியது சிறிலங்கா அரசு

வடக்கிற்கான தொடருந்துப் பாதை புனரமைப்பு பணியில் ஈடுபட்ட இந்திய நிறுவனத்துக்கான கொடுப்பனவை, சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தி வைத்துள்ளது.

ரணில் – மைத்திரி அரசின் இந்தியாவுடனான தேனிலவு முடிகிறதா?- உபுல் ஜோசப் பெர்னான்டோ

பலாலி விமானப்படைத் தளத்தின் மீள்கட்டுமான ஒப்பந்தத்தை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு இந்தியா ஆசி வழங்கியதன் அடிப்படை நோக்காகும்.

அனைத்துலக நாணய நிதியம் மீது சிறிலங்கா விசனம் – வொசிங்டனிடம் முறைப்பாடு

சிறிலங்காவின் பொருளாதாரக் கொள்கை தொடர்பாக அனைத்துலக நாணய நிதியம் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாஜுதீன் கொலை வழக்கில், மகிந்தவின் சாரதியான இராணுவ அதிகாரி கைதாகிறார்

சிறிலங்கா ரக்பி அணியின் முன்னாள் தலைவர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாரதி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார்.

திருமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை – திசை மாறிய திட்டம்

திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான பாரிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார்.