மேலும்

நாள்: 19th December 2015

2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இறுதி வாக்கெடுப்பில் வெற்றி

சிறிலங்கா அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிறிலங்கா படைகளை மறுசீரமைப்பது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை

சிறிலங்கா இராணுவத்தை மறுசீரமைப்பது தொடர்பான நிதி மற்றும் நிபுணத்துவ உதவிகளை வழங்க முன்வந்துள்ள பிரித்தானியா, அது தொடர்பாக ஆராய, பிரித்தானிய படை அதிகாரிகள் குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.

தாஜுதீன் கொலை: சிராந்தியின் சாரதியாக இருந்த கப்டன் திஸ்ஸ வெளிநாடு செல்லத் தடை

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், கப்டன் திஸ்ஸ என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறத் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்தை சிறிலங்கா நிராகரிப்பு

தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் உயர்கல்வி அமைச்சர், லக்ஸ்மன் கிரியலெ்ல இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவின் புதிய அரசு பெறுமதிமிக்க பங்காளி – என்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவின் புதிய அரசாங்கம், இந்தியாவின் பெறுமதிமிக்கதொரு பங்காளி என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டாளர்களுக்கு சிறப்பு வலயம் – கதவைத் திறக்கிறது சிறிலங்கா

அம்பாந்தோட்டையில் சீன முதலீட்டாளர்களுக்காக சிறப்பு வலயம் ஒன்றை உருவாக்க, சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக, சிறிலங்கா முதலீட்டுச் சகையின் தலைவர் உபுல் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு 48 வீதமான இலங்கையர்கள் ஆதரவு

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, நம்பகமான பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று, 48.1 வீதமானோர் கருத்துக்கணிப்பு ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வட்டமடு தமிழ் மக்களின் மேய்ச்சல் நிலஉரிமையை உறுதிப்படுத்தியது மேன்முறையீட்டு நீதிமன்றம்

அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் வட்டமடுப் பிரதேசத்தில், தமிழ் மக்களின் மேய்ச்சல் காணிகளில், முஸ்லிம்கள் விவசாயத்தில் ஈடுபட்டது சட்டவிரோதசெயல் என்று சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிறிலங்கா படைத் தளபதிகளுடன் அமெரிக்க பாதுகாப்பு திணைக்கள உயரதிகாரி தீவிர பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலர் அமி சீரைட், கொழும்பி்ல் நேற்று சிறிலங்கா பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகளுடன் தீவிர பேச்சுக்களை நடத்தியுள்ளார்.