மேலும்

நாள்: 24th December 2015

கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திடமாட்டோம் – ஹர்ஷ டி சில்வா

இந்தியா உள்ளிட்ட எந்தவொரு நாட்டுடனும், கண்ணை மூடிக் கொண்டு உடன்பாடுகளில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் தயாராக இல்லை என்று, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு

போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் நாளையுடன் ஓய்வு பெறவுள்ளதாக திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணைப் பொறிமுறை குறித்து தீவிர ஆலோசனை – சிறிலங்கா அதிகாரி தகவல்

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு  அமைய, முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை  பொறிமுறை கட்டமைப்பு தொடர்பாக  பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும் இடம்பெற்று வருவதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுனாமியில் சிக்கிவிட்டாராம் சம்பந்தன் – சிங்களப் பேரினவாதிகள் பரிகாசம்

விக்னேஸ்வரன் என்ற சுனாமிப் பேரலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  சம்பந்தன் சிக்கி தவிக்கிறார் என்று தெரிவித்துள்ளார், மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன.

கூட்டமைப்பை பிளவுபடுத்தும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை – என்கிறார் லக்ஸ்மன் கிரியெல்ல

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்த வேண்டிய எந்தத் தேவையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கிடையாது சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.