மேலும்

நாள்: 22nd December 2015

2015 சிறிலங்காவின் வரலாற்றுத் திருப்பம்மிக்க ஆண்டு – அனைத்துலக ஊடகம்

அரசியல் உறுதிப்பாடு மற்றும் நல்லாட்சி போன்றன கடைப்பிடிக்கப்பட்டால், கிழக்கு மற்றும் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பின் நலன்களைப் பெறத்தக்க நல்லதொரு இடத்தை சிறிலங்கா தக்கவைத்துக் கொள்ள முடியும்.

பொறுப்புக்கூறல் விவகாரம் – சிறிலங்காவுக்கு அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமும் அழுத்தம்

சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும், நல்லிணக்கம் மற்றும் நம்பகமான இடைக்கால நீதிப் பொறிமுறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், சிறிலங்கா அரசாங்கத்திடம் அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களமும் வலியுறுத்தியுள்ளது.

ஒபாமாவின் செய்தியுடன் நிஷா பிஸ்வால் வரவில்லை – அமெரிக்கத் தூதரகம்

சிறிலங்கா அரசாங்கத்துக்கான அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புச் செய்தியுடன், இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், கொழும்பு வந்திருப்பதாக வெளியான செய்திகளை அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.

விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அமைப்பு குறித்து சம்பந்தன் கருத்து

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்பதாகவும், அதேவேளை, கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா – இந்தியா இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை

சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, இரு நாடுகளினதும், அமைச்சர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.