மேலும்

நாள்: 30th December 2015

அரசியலமைப்பு மாற்றம் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் – கூட்டமைப்பு இடையே பேச்சு

சிறிலங்காவில் அரசியலமைப்பு மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், அரசியலமைப்பு யோசனைகள் தொடர்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.

பாரீசில் புலம்பெயர் தமிழர் திருநாள் -2016

தமிழர் திருநாளை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் “புலம்பெயர் தமிழர் திருநாள் 2016” நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதன் ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.

இரு நீதிவான்களின் இடமாற்றங்கள் ரத்து – நீதிச்சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை

பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த கொழும்பு பிரதம நீதிவான் கிகன் பிலபிட்டிய மற்றும் கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் ஆகியோரின் இடமாற்றங்களை ரத்துச் செய்ய சிறிலங்காவின் நீதிச் சேவைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

பிரகீத் கடத்தல் – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அரசு

அரசியலமைப்புத் திருத்தம், ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு – பொங்கலுக்கு முன் மீள்குடியேற்றம்

வலி.வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.