மேலும்

நாள்: 2nd December 2015

ராஜீவ் கொலை கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் மாநிலஅரசுக்கு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு மாநில அரசுக்கு இல்லை என்று இந்திய உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்தியத் தளபதி வராததால், அமைதிப்படையினரின் நினைவிடத்தில் துணைத்தூதுவர் அஞ்சலி

இந்திய இராணுவத் தளபதியின் யாழ்ப்பாண வருகை ரத்துச் செய்யப்பட்டதால், இந்திய அமைதிப்படையினருக்கு, அஞ்சலி செலுத்த பலாலியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன் மட்டும் பங்குபற்றினார்.

கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொண்டாலே நல்லிணக்கம் சாத்தியம் – சந்திரிகா

கடந்தகாலத் தவறுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்ளாமல், நல்லிணக்கம் சாத்தியப்படாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டோரின் விடுதலை – இன்று முக்கிய தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறதா என்பது தொடர்பான இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாறுகாணா வெள்ளத்தில் மிதக்கும் சென்னை – விமான நிலையமும் மூடப்பட்டது

கடந்த இரண்டு நாட்களாக விடாமல் கொட்டி வரும் மழையால், தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள அதேவேளை, சென்னை நகரம் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது.