மேலும்

மாதம்: December 2015

சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை – சிறிலங்கா அரசு

அரசியலமைப்புத் திருத்தம், ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையிலேயே மேற்கொள்ளப்படும் என்றும், சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் பிரதி அமைச்சர் அஜித் பெரேரா.

வலி.வடக்கில் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிவு – பொங்கலுக்கு முன் மீள்குடியேற்றம்

வலி.வடக்கு பிரதேசத்தில் சிறிலங்கா படையினர் வசம் உள்ள 700 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

பெப்ரவரிக்கு முன் சிறிலங்கா வருவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு – அடுத்த ஆண்டில் பேச்சு நடத்தவுள்ளது சீனா

சுதந்திர வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் அடுத்த ஆண்டு பேச்சு நடத்தப்படும் என்று சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் முக்கிய ஜனநாயக வெற்றி கிடைத்த ஆண்டு – ஜோன் கெரி

2015ஆம் ஆண்டு சிறிலங்காவிலும் உலகின் ஏனைய சில நாடுகளிலும், மிகவும் முக்கியமான ஜனநாயக வெற்றிகள் கிடைத்திருப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

அப்போது ஆயுதங்களுடன் போராடியவர்கள் இப்போது பசி வேதனையுடன் போராடுகின்றனர்

போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த போதிலும் தற்போதும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதே மிகப் பாரிய பிரச்சினை. 

சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க கோருகிறார் மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனுமதியின்றி, தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் பங்கெடுத்தது குறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம் – மக்களின் கருத்தறிய 24 பேர் கொண்ட குழு நியமனம்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கு, அரசியல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

வேதனை வடியவில்லை வேண்டுமா புத்தாண்டு ?

வெள்ளம் வடிந்தும் வேதனை வடியவில்லை. வெள்ளம் விட்டுச் சென்ற தீப்புண்கள் ஆற தலைமுறைகள் ஆகலாம். சுனாமியின் வடுக்கள் கடலோர மக்களின் மனசில் இன்னும் பச்சைக்காயமாய் நின்று கொண்டிருக்கிறது ; நீரில் மூழ்கிய வாழ்விலிருந்து மீண்டுஎழ ஒரு தலைமுறையோ, இரு தலைமுறையோ எத்தனை காலம் எடுக்குமெனச் சொல்ல முடியாது. – தமிழ்நாட்டில் இருந்து புதினப்பலகைக்காக பா.செயப்பிரகாசம்.

தமிழ் அரசுக் கட்சிக்கு அழைப்பு இல்லை – நிபுணர் குழுவில் இடம்பெற்றது எப்படி?

அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதற்கு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கியுள்ள நிபுணர் குழுவில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் இருவர் இடம்பெற்றுள்ள போதிலும், இந்தப் பேரவையில் இணைந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.